பாலிவுட் திரைபடத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் சந்தானம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

sandhanam
sandhanam

actor santhanam latest look image: சின்னத்திரையில் இருந்து தன்னுடைய சிறந்த திறமையை வெளிக்காட்டி  வெள்ளித்திரைக்கு போன பிரபலங்கள் தமிழ் திரை உலகில் ஏராளம் அந்த வகையில் சிவகார்த்திகேயன் சந்தானம் போன்ற அனைவருமே சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு போனவர்கள் தான்.

இவர்கள் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் திறமையின் மூலமாக தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து விட்டார்கள்.  அதிலும் நடிகர் சந்தானம் காமெடிக்கு சிரிக்காத ரசிகர்கள் இருப்பின் அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

ஏனெனில் நடிகர் சந்தானம் காமெடி ஆனது டைமிங் பஞ்சாக தான் இருக்கும். இதன் காரணமாகவே மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு இவருடைய காமெடி வசனங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டன.

பொதுவாக காமெடி நடிகராக திரையுலகில் வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ 1 ஆகிய திரைப்படங்களில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் ஹிட் கொடுக்காவிட்டாலும் ஓரளவு வசூலைப் பெற்று அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தன இதனை தொடர்ந்து தற்போது சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம் ஹிந்தியிலும் சின்ன மன்னு என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளாராம் அந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் அபூர்வ சகோதரர் கமல்ஹாசனின் அப்பு கேட்டபின் நடித்துள்ளாராம்.

sandhanam-
sandhanam-

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் வெளியாக வில்லை என்றாலும் அவர் அப்பு கெட்டப்பில் இருக்கும் போட்டோவானது சந்தானத்தின் அலுவலகத்தில் என்றும் இருந்து வருகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் டிக்கிலோனா என்னும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் அவருடைய மகனும் பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இதனாலேயே இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சமூகவலைத்தள பக்கத்தில் எகிறி கிடக்கிறது.

sandhanam-
sandhanam-