சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் என்னவென்றால் ஜெய் பீம் திரைப்படம் தான் இத்திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார் மேலும் இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாக்கி விட்டது.
அந்த வகையில் பல அரசியல் வட்டாரங்கள் மற்றும் மக்கள் என பல்வேறு பிரிவினர்களும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் பாமகவினர் வன்னியர் ஜாதியை குறிப்பிட்டு சில காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் மறைந்த குரு மூர்த்தி என்பவரை குறிப்பது போல் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பது மட்டுமின்றி அவருடைய வீட்டில் அக்னி கலசம் இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது இதன் காரணமாகவே பாமகவினர் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இதனால் நடிகர் சூர்யா 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் அது மட்டுமில்லாமல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வன்னியர் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தில் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் சபாபதி படத்தின் பிரஸ்மீட் போது ஜெய்பீம் திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார். அந்த வகையில் நடிகர் சந்தானம் கூறியது என்னவென்றால் ஒரு தரப்பினரை தாழ்த்தியும் மற்றொரு தரப்பினர் உயர்த்தியும்
திரைப்படம் எடுக்க கூடாது என்று கூறியது மட்டும் இல்லாமல் இந்துக்களை உயர்த்தி பேசுவதற்காக கிறிஸ்தவர்களை மட்டம் தட்ட கூடாது ஏனெனில் தியேட்டரில் எல்லா தரப்பு மக்களும் திரைப்படம் பார்க்க வருவார்கள் ஆகையால் பொதுநலன் கருதி சினிமா எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இவ்வாறு சந்தானம் கூறியது விவாதப் பொருளாக இருந்தாலும் அவர் கூறியது மிகவும் சரியான ஒன்றாக இருந்தாலும் சந்தானமும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது காரணமாக தான் இப்படி பேசி உள்ளார் என்று சமூக வலைதள பக்கத்தில் பேசிவருகிறார்கள்
மேலும் இதன் காரணமாக சூர்யா மற்றும் சந்தானம் ஆகிய இரு ரசிகர்களிடையே பெரும் வாதம் இணையத்தில் ஏற்பட்டது மட்டும் இன்றி நடிகர் சூர்யாவுக்கு தான் அதிக அளவு ஆதரவு வந்து கொண்டிருக்கிறது.