கலவை விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளில் கோடியை கடந்த சந்தானத்தின் 80ஸ் பில்டப்.! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

80s Buildup Day 1 Collection
80s Buildup Day 1 Collection

80s Buildup Day 1 Collection: நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று 80ஸ் பில்டப் படம் வெளியாகி இருக்கும் நிலையில் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது. சின்னத்திரையின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய சந்தானம் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியானாக நடித்து வந்த சந்தானம் சமீப காலங்களாக ஹீரோவாக அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களுக்கு சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பருத்திவீரன் படத்தில் அந்த ஹீரோ நடிச்சிருந்தா சூப்பராக இருந்திருக்கும்.. இயக்குனர் அமீர் பேச்சு..!

மேலும் காமெடியனாக இருக்கும் அனைவரும் ஹீரோவாகிவிட்டால் காமெடியானாக நடிப்பதற்கு ஆளே இருக்க மாட்டார்கள் போல என்ற நிலை ஏற்பட்டது. ஏனென்றால் சந்தானம் காமெடியனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்ததால் திடீரென இவரை ஹீரோவாக பார்க்க முடியவில்லை. இதனால் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட தனது விடாமுயற்சியால் சமீப காலங்களாக ஹிட் திரைப்படங்களை தந்து வந்தார்.

அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், கிக் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த சூழலில் நேற்று சந்தானம் நடிப்பில் 80ஸ் கெட்டப்பில் 80ஸ் பில்டப் என்ற படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் கல்யாண் இயக்கினார்.

குறைந்த ஓட்டுக்களை வாங்கி இந்த வாரம் வெளியேறப் போகும் முக்கிய போட்டியாளர்.? குஷியில் ரசிகர்கள்

மேலும் சந்தானத்திற்கு ஜோடியாக இந்த படத்தில் பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ராதா ப்ரீத்தி நடிக்க இவரை தொடர்ந்து கே.எஸ் ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சுந்தர்ராஜன் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான இப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் முதல் நாளில் நேற்று மட்டும் ரூ.1.2 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இந்த இரண்டு நாட்களும் மேலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.