தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக நடித்து தற்போது அசத்தியவர் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்து அஜித் விஜய் போன்ற நடிகர்களை வைத்து படம் கொடுத்தவர் எஸ். ஜே. சூர்யா.
ஒரு கட்டத்தில் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி போக போக நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் அளவிற்கு மாறி விட்டார். இவரது திறமையை பார்த்து தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு படங்களில் கமிட்டாகி வருகின்றனர்.
அண்மையில் கூட வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். வில்லனாக ஒரு பக்கம் மிரட்ட மறுபக்கம் ஹீரோவாகவும் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன இதனால் எஸ். ஜே. சூர்யா காட்டில் தற்பொழுது அடழை பெய்து கொண்டிருக்கிறது.
மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா கையில் தற்பொழுது 8 திரைப்படங்கள் இருக்கின்றன மாநாடு திரைப்படத்திற்கு பிறகு எஸ். ஜே.சூர்யா தனது சம்பளத்தை இன்னும் இரண்டு கோடியை அதிகமாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கும் போதே இவ்வளவு படங்கள் இருப்பது மிகப் பெரிய விஷயம் தான் என பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் நடிகர் எஸ். ஜே, சூர்யாவை சந்தித்து ஒரு கதையை சொல்லி உள்ளார் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என தகவல்கள் உலா வருகின்றன. விஜய்சேதுபதியை தொடர்ந்து ஹீரோ, வில்லனாக தற்போது எஸ். ஜே, சூர்யா மிரட்டி வருவதால் அவருக்கான வரவேற்பு உச்சத்திலேயே இருக்கிறது.