Redin kingsley : சினிமா உலகில் பிரபல காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் டான்சராக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி ஒரு கட்டத்தில் காமெடியனாக சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், அண்ணாத்த, ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ், நாய் சேகர் ரிட்டன்ஸ், மார்க் ஆண்டனி போன்ற பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து இருந்தார். அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிட தந்தது.
2வது குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கின்னஸ் பக்ரு..
இந்நிலையில் அவரது நீண்ட நாள் காதலியான சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.. அதனால் ரெடின் கிங்ஸ்லி பற்றிய பல்வேறு தகவல்களையும் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரெடின் கிங்ஸ்ஸி பற்றி இன்னொரு தகவல் உலா வருகின்றன அந்த வகையில் சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி இருக்கின்றன. இவர் சினிமாவை தாண்டி பல்வேறு பிசினஸ் செய்து வருகிறாராம்.. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராக ரெடின் கிங்ஸ்லி இருந்து வருகிறார்.
சொந்தக்காரங்களே கை கொடுக்காத விக்ரமை தூக்கி விட்ட சேது படம்.! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..
இதன் மூலம் இவருக்கு கீழ் 300 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனராம். இந்த பிசினஸ்களின் மூலம் கோடி கணக்கில் லாபம் பார்த்து வரும் ரெடின் கிங்ஸ்லி முழு சொத்து மதிப்பு சுமார் 40-ல் இருந்து 50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. Youtube வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..