சின்னத்திரையில் அப்படி முகம் தெரியாத புதிதாக அறிமுகமான நடிகர் நடிகைகள் ஜோடிகளாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களும் பலர் உள்ளார்கள். அந்த வகையில் வெள்ளித்திரையிலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள் உள்ளார்கள்.
அப்படி திரைப்படங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஜோடிகள் தான் நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன்.இவர்கள் இருவரும் திரைப்படங்களில் ஒன்றாக நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். அப்படி ஒரு திரைப்படம் தான் நேசம் புதுசு இத்திரைப்படத்தில் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு 15 வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் தற்பொழுது ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வருகிறார்.
பிரியா ராம்ன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் இருவரும் தங்களது திருமண நாள் என்பதால் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி உள்ளார்கள். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு இன்னும் பலரும் இவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளையும் கூறி வருகிறார்கள்.