Priyanka Mohan: நடிகை பிரியங்கா மோகன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதாகவும், ஓவியா காருக்குள் நடந்த சம்பவம் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
90 காலகட்டத்தில் பல படங்களில் காமெடி ரோலில் கலக்கி வந்த இவர் சமீப காலங்களாக சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி வருகிறார். அப்படி நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வருவது சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு இவர் கூறும் சர்ச்சைக்குரிய தகவல்கள் சினிமா பிரபலங்களை கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஏராளமானவர்கள் நேரில் சென்று சண்டை போட்டவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார் எனவே இதனால் கடுப்பான ரேகா நாயர் திருவான்மையூர் கடற்கரையில் பைல்வான் ரங்கநாதன் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் பொழுது வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் எனக் கூறி பகீர் கிளப்பினார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ஓவியா குறித்து பேசிய பயில்வான் கூறியதாவது, ஜெயிலர் இயக்குனருடன் பிரியங்கா மோகன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றுகிறார், அவர் நெல்சன் இயக்கத்தில் அறிமுகமானார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் அதனை அடுத்து டான், எதற்கும் துணிந்தவன் படங்களிலும் நடித்தார்.
நெல்சன் திலீப்குமாருக்கும் பிரியங்காவிற்கும் நெருங்கிய நட்பு உண்டு. நெல்சன் எப்பொழுதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்பொழுதெல்லாம் பிரியங்கா மோகனும் செல்கிறார். இப்போது நெல்சன் குடும்பத்தோடு சென்று இருக்கிறார் அவரது குடும்பத்தில் ஒருவராக பிரியங்காவும் சென்றிருக்கிறார்.
ஓவியா குறித்து பேசிய இவர், ஓவியா போதையில் ஊர் சுற்றுகிறார் என்று சொன்னோம் அதற்கு ஓவியா என்ன சொன்னார் தெரியுமா நான் நிறைய குடிக்க மாட்டேன் கொஞ்சமா தான் குடிப்பேன் என்றார். மேலும் பாலியல் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் அதை கற்று தெளிய முடியாது. பிராக்டிக்கலாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார் அவர் சொன்னதை தான் சொல்கிறேன் சமீபத்தில் கூட காருக்குள் பேண்ட் ஜிப்பை கழற்றி ஒரு போஸ் கொடுத்து இருக்கிறார். மாலத்தீவிற்கு சென்றதும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுகிறார் எனக் கூறினார்.