தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகர் ராம்கி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கு என்று ரசிகர்கள் இருந்து தான் வருகிறார்கள்.
ராம்கி சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார். பிறகு மார்க்கேட் குறைந்ததால் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார் சில காலங்கள் கழித்து திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் இவர் நடிப்பில் தற்போது வேட்டை நாய் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இப்படத்தை ஆர்கே சுரேஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராம்கி தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராம்கி புகைப்படத்தில் கபாலி மற்றும் காலா திரைப்படத்தில் ரஜினி எப்படி உள்ளாரோ அதேபோல் அச்சு அசலாக இருக்கிறார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.