தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பே தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை, அஜித்துடன் இணைந்து மங்காத்தா உள்ளிட்ட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.
எந்த திரைப்படமும் இவருக்கு பிரபலத்தை தரவில்லை சூதுகவ்வும் திரைப்படம் தான் இவருக்கு திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் ஆண்டவன் கட்டளை, நேரம், காக்காமுட்டை, ஆரஞ்சுமிட்டாய், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட இன்னும் பல வெற்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டால் அதனை தவற விடாமல் நடித்து விடுவார்.
அந்தவகையில் கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் விஜய்சேதுபதியை தொடர்ந்து மேலும் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆர்.ஜே.நவலக்ஷ்மி என்பவருடன் திருமணம் நடந்தது. அதோடு இவர்கள் சில வருடங்கள் காதலித்து வந்து அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த தம்பதியரின் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மயன்ராணா என பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்பொழுது இவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.