80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன் இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான் அதன் காரணமாகவே அதிகம் சம்பளம் வாங்கினார். முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ ராமராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், அம்மன் கோவில் வாசலிலே.
மற்றும் வில்லுப் பாட்டுக்காரன், சீறிவரும் காளை, தங்கமான ராசா என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு படங்களை கொடுத்தவர் திரை உலகில் சூப்பராக ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக மேதாவி படம் அவருக்கு சுமாரான படமாக அமைந்தது அதன் பிறகு திரையில் இவர் நடிக்கவே இல்லை.
10 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ஹீரோவாக நடிக்க தற்பொழுது ஒப்பந்தமாகி உள்ளார். ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்திற்கு சாமானியன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராமராஜனுடன் கைகோர்த்து ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ராஹேஷ் இயக்குகிறார் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ராமராஜன் இந்த படம் குறித்தும் மற்றும் சினிமா குறித்தும் பேசி இருந்தார் அதில் அவர் சொல்லி உள்ளது சமீபகாலமாக பார்ட் 2 ட்ரெண்ட் ஆகி வருகிறது ஒரு படம் என்பது ஒரு குழந்தை போல இரண்டாவது குழந்தை பிறந்தால் பார்ட் 2 என பெயர் வைப்போமா..
இயக்குனர் கங்கை அமரன் அண்ணன் கூட கரகாட்டக்காரன் – 2 எடுப்போம் என்றார் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. என ராமராஜன் கூறினார். ஆனால் கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்னர் கரகாட்டக்காரன் 2 எடுக்க இருப்பதாகவும் அதில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் அனைவரும் நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.