Rachitha Mahalakshmi: சீரியல் நடிகையையும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரக்ஷிதா மகாலட்சுமி சமந்தா போலவே தனக்கும் அரிய வகை வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருப்பதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் மிகவும் அழகாக இருக்க வேண்டும்.
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, முக அழகு போன்றவை இருந்தால் மட்டுமே தொடர்ந்து இவர்களுக்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம். நடிகை ரக்ஷிதா கன்னடா சீரியல் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பை பெற்றார்.
இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2 போன்ற தொடர்கள்தான் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. இவ்வாறு பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தற்பொழுது வரையிலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல்களில் நடிக்காமல் இருந்து வரும் ரக்ஷிதா திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அந்த பேட்டியில் தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசினார் அதாவது பொதுவாக பலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும் அதுதான் இயல்பும் கூட, ஆனால் ரக்ஷிதாவுக்கு சாப்பாடை முகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடி விடுமாம் இப்படிப்பட்ட அரியவகை ஹார்மோன் பிரச்சனை இருப்பதனால் அவதிப்பட்டு வருகிறாராம்.
உடல் எடை அதிகரித்தாலும் மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டர்கள் இதனை கூறியுள்ளனர். எனவே இதற்காக ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை கணிசமாக வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார் ரக்ஷிதா.