தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கரன். இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே. இந்த திரைப்படத்தில் மீனா, வடிவேலு, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தை தனது ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் ராஜ்கிரணின் திரை பயணத்தையும் திரை வாழ்க்கையை திருப்பி போட்டது. அந்த அளவு மரண ஹிட்டடித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் 2வது பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்புசுல்தான் நைனார் முகமது இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்கிரணின் மகன் தன்னுடைய 20 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆகையால் இன்றைய தினத்தில் ராஜ்கிரன் வெளியிட்ட செய்தியானது இறையருளால் இன்று என் மகன் திப்புசுல்தான் நயினார் முகமது அவர்களின் 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை என் மகன் எழுதி முடித்துவிட்டார் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
எனவே அவர் இந்த திரைப்படத்தை இயக்கவும் இருக்கிறார் என்னை எப்படி தமிழ் சினிமா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தூக்கிவிட்டது அதேபோல் இந்தத் திரைப்படம் எனது மகனையும் வெற்றி இயக்குனராக மாற்றும் என நம்புகிறேன் அதற்கு உங்களுடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
எனவே ராஜ்கிரண் மகன் என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.