தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் அவருடைய மதிப்பையும் மரியாதையும் உயர்த்தியது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது என்று கூறலாம்.
அண்ணாத்த வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்த நாள் விழாவை மிக பிரம்மாண்டம் மற்றும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் அந்த வகையில் ரஜினியின் வீட்டு முன்பு நள்ளிரவில் கேக் வெட்டி ரசிகர்கள் அறைபறை கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஒன்றாம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் என இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஆனது பல வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.