பிரபல நடிகையிடம் காதலை சொல்லாமல் ஒருதலை காதலாக மாறிய ரஜினியின் காதல்.! தேவதாசன் கதையை போல் என் கதையாச்சு..

rajini love story
rajini love story

Rajini :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. அவரது திரைப்பட வாழ்க்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து இன்றும் வெற்றி நடை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

திரைப்பட வாழ்க்கையை போன்று அவரது குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக உள்ளது என அனைவரும் அறிந்ததே. மேலும் இவர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகளுமே திரையுலகில் தங்களை தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அடையாளப் படுத்திக் கொண்டனர்.

கேப்டன் மில்லர் VS அயலான் : கேப்டன் மில்லரிடம் அடிபணிந்ததா அயலான் ஏலியன்.! வசூலில் யார் முதலிடம்.?

என்னதான் இவருக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருந்தாலும் இவருக்கும் காதல் தோல்வி இருப்பது என்பது தான் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை அளிக்கிறது.  அதாவது இவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்ததாக தெரிய வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து 22 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சென்றபோது அவரது காதலை ஸ்ரீதேவியிடம் சொல்லிவிடலாம் என நினைத்தாராம். ஆனால் அப்போது திடீரென பவர் கட் ஆனதால் சகுனம் சரியில்லை என தனது காதலை சொல்லாமல் விட்டுவிட்டார் என பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலச்சந்தர் கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர் படத்துக்கு பயத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?