தமிழ் சினிமா உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இடத்தை இப்பொழுது பிடிக்க அஜித் விஜய் போன்ற நடிகர்கள் பாடு படுகின்றனர்.
ஆனால் ரஜினி இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க ரெடியாக இருந்து வருகிறார். தற்போது கூட தனது 169 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு சிவாஜி படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் வெளியாகி இதுவரை 15 வருடங்கள் நிறைவடைந்த உள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதனை சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிவாஜி படத்தில் பணியாற்றிய சீனிவாஸ் மோகன் இந்தப் படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். சிவாஜி படத்தில் ரஜினியின் நிறத்தை மாற்ற digital skin grafting என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறித்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
சிவாஜி படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளை நிற தோலில்தான் அதிக இருந்திருப்பார். இதோ சிவாஜி படத்தில் பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் வெளியிட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Digital Skin Grafting #15yearsofSivaji @shankarshanmugh @rajinikanth @avmproductions @arrahman #KVAnand @Vairamuthu #Vaali @editoranthony #ActorVivek @shriya1109 @PeterHeinOffl
@arunaguhan_ pic.twitter.com/GJ4vxFX5rh— Srinivas Mohan (@srinivas_mohan) June 15, 2022