தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலை உண்மையாகவே மாத்தி தற்பொழுது சின்ன குழந்தைகள் கூட சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார்.
இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஆனால் சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் ஒரு சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. ஏனென்றால் இவர் முன்பு நடித்த பொழுது மிகவும் சுறுசுறுப்பாக நடித்ததாகவும் தற்போது இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சுறுசுறுப்பாக நடிக்கவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தை தான் ரொம்பவும் நம்பி உள்ளார். ஏனென்றால் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து பிடிக்கப்பட்டு உள்ளதாம்.
அதாவது ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்பொழுது அவரு இல்லை என்றாலும் அனைவர் மனதிலும் இடம் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஒரு காலகட்டத்தில் எந்த முன்னணி நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வந்தார்.
அந்த வகையில் அனைவரும் இவரை பாராட்டி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு நாட்டின் பிரதமரே இந்த நடிகர் யார் என்று கேட்டு நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து தனது பாராட்டை கூறியிருந்தார் அந்த அளவிற்கு சிவாஜி கணேசன் சினிமாவில் புகழ் பெற்றவர்.
அந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து பல திரைப்படங்கள் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத திரைப்படம் தான் பாசமலர். இந்தத் திரைப்படம் அண்ணன் தங்கை சென்டிமென்ட் வைத்து உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் இவர்களின் சென்டிமென்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் பாசமலர் திரைப்படத்தை காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள் என்றால் தற்போது வரையிலும் ரஜினி அண்ணன் தங்கை பாச உறவுகளை வைத்து எந்த திரைப்படத்திலும் நடித்தது இல்லை.

எனவே இவரும் சிவாஜி கணேசன் மாற வேண்டும் என்பதற்காக தனது இறுதி காலகட்டத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் அண்ணன் தங்கை பாசமலர் திரைப்படத்தை வைத்து நடித்து வருகிறார். அண்ணாத்த திரைப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.