தற்பொழுது பிரபல நடிகை குஷ்பூ திடீரென நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்துள்ளார் அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சூப்பர் ஹிட் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் மற்றவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், தாலாட்டு பாடவா, மைக்கேல் மதன காமராஜன், சின்னத்தம்பி உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, பிரபு உள்ளிட்ட பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டப்பட்டதும் நாம் பலருக்கும் தெரியும்.
தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் குஷ்பூ ரஜினியுடன் இணைந்து மன்னன், அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அண்ணாத்த பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமாக அண்ணாமலை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்த படத்தை இடம்பெற்றிருக்கும் கோடையில் தாழம்பூ பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் அதன் மூலம் பல படங்களை தயாரித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திடீரென குஷ்பு சந்தித்துள்ளார்.
அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் குஷ்பு கூறி இருப்பதாவது, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் உடன் ஒரு சாதாரண சந்திப்பு தேநீர் மற்றும் சிரிப்புடன் இருக்கும் போது அது மிகுந்த மகிழ்ச்சியும் அளிக்கிறது உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார் உங்கள் மதிப்பு மிக்க நிறுவனத்தில் எப்பொழுதும் இருப்பது போன்ற மகிழ்ச்சி. நீங்கள் ஆச்சரியமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.