ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தியா.? பிரியங்காவா.? வெளியான புதிய தகவல்

rajini-keerthi-priya
rajini-keerthi-priya

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் ரஜினி. இவர் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் வயதாகும் காரணத்தினால்  முன்பு இருந்தது போல் திரைப்படங்களில் சுறுசுறுப்பு இல்லை என்று கூறிவருகிறார்கள்.

இருந்தாலும் இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினிகாந்தை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் பட இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டு ரஜினியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கலாம் என்ற முடிவு செய்துள்ளாராம். ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தலைவர் 169 என தற்பொழுது பெயர் வைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தினை மிகவும் பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன்,  அனிருத் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் என இத்தகவல் உறுதியாகிவுள்ளது.

rajini kanth
rajini kanth

தொடர்ந்து திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை தேடும் பணியில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் வந்த தகவலின் படி கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இந்த இரண்டு நடிகைகளில் ஒருவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைக் குறித்து ரசிகர்களிடம் கேட்கும் பொழுது கண்டிப்பாக இந்த இரண்டு நடிகைகளும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மாட்டார்கள் அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் வேணா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.