தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது 169வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார். இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை எடுத்து வருகிறார். ஜெயிலர் படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ரஜினி உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ் குமார் எனது மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
ரஜினியின் நண்பர்கள் மலையாள திரை உலகின் இயக்குனரும், நடிகருமான ஸ்ரீவாசன். ரஜினியின் முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்த போது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது இருவர்களிடையே காதல் மலர்ந்தது இருவரும் ஒருவரை ஒருவரை நேசிக்க துவங்கியுள்ளனர்.
ரஜினி ஒருநாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார் நாடகத்தில் ரஜினியை நடிப்பை கண்ட அந்த பெண் ஷாக்காகி உள்ளார். அதன் பின் ஒரு ஃபிலிம் இன்ஸ்டியூட் ஒன்றில் ரஜினியை சேர சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். அந்தப் பெண் கொடுத்த தைரியத்தில் தான் ரஜினி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர முடிவு செய்தார்.
பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்வதற்கு பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி நின்றபொழுது அந்த பெண் தான் பணம் கொடுத்து உதவினார் ஆனால் திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினி வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார் ரஜினி அழுதார். நான் வாழ்வதற்கு ஒரே காரணமே அந்த பெண்ணை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் என ரஜினி கூறினாராம் இதனை ஸ்ரீவாசன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.