தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொதுவாக இவருடைய திரைப்படங்கள் வெளிவந்து தியேட்டரில் கட்டவுட்க்கும் கூட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. ஏனெனில் மாபெரும் ரசிகர் கூட்டம் இவர்க்கு உண்டு.
அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக இருந்து வருகிறது அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குவது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன இந்நிலையில் இத் திரைப்படமானது கிராமத்து பாணியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தாக தெரியவந்துள்ளது
இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பற்றிய மற்றொரு விஷயம் தெரிய வந்துள்ளன அதாவது இத்திரைப்படத்தின் பஸ்ட் சிங்கில் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் ரஜினியின் என்ற பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் பாடியுள்ளாராம் அந்த வகையில் அவருடைய நினைவு அஞ்சலிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருடைய நினைவு நாளன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.