முன்னணி நடிகைகளாக வலம் வந்த சில நடிகைகள் வயதானாலும் கூட இளமை குறையாமல் இளமையில் எப்படி இருந்தாரோ அதே போலவே வயது முதிர்ச்சியிலும் இருக்கும் நடிகைகள் சிலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை மீனா. இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு வயது ஆனாலும் கூட ஏன் திருமணமாகி இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது ஆனால் இவரை பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருப்பதால் பல நடிகர், நடிகைகளின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினி மற்றும் மீனாவை பற்றி சொல்லப்போனால் குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்து அதன் பிறகு அவருக்கு ஜோடி போட்டவர் தான் மீனா.
அந்த வகையில் ரஜினி மற்றும் மீனாவின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஏனென்றால் இவர்களின் ஹிஸ்ட்ரி ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்ததால் தற்போது வரையிலும் இவர்கள் இருவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்த முத்து திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த தற்போது வரையிலும் பிரபலமாக இருந்து வருகிறது. அதோடு இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். முத்து திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு பிரபலம் கிடைத்ததோ அதே அளவிற்கு வீரா திரைப்படம் வெற்றி பெற்றது.
இவ்வாறு ஒன்றாக இணைந்து நடித்து வந்த இவர்கள் மீனா திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினி மற்றும் மீனா ஒன்றிணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா, தங்கையாக கீர்த்தி சுரேஷ் இவருக்கு முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்து வருகிறார்கள்.
இவ்வாறு பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொண்ட மீனா மற்றும் ரஜினி மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ரஜினி நீ எங்களை ஏமாற்றி விட்டாய் என்று கூறியுள்ளார். இதற்கு பதட்டம் அடைந்த மீனா ஏன் இப்படி சொல்கிறீர்கள் சார் நான் என்ன பண்ணுனேன் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே இத்தனை வருடங்கள் ஆனதால் எங்கள் முகம் எல்லாம் இப்படி மாறி வயதாகி விட்டது ஆனால் நீ மட்டும் விரா திரைப்படத்தில் எப்படி அழகாக உன்னைப் பார்த்தேனோ அதே போல் இப்போதும் இருக்குற என்று கூறியுள்ளார். இதற்கு மீனா வெட்கப்பட்டுக்கொண்டே சிரித்தாராம்.