லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படத்தின் கதைகளம் இதுதான்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

rajini-171
rajini-171

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171வது திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியப்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு திரைப்படங்களின் மூலம் ஹிட் கொடுத்து இருக்கிறார்.

இதனால் முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்படி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பிளாப்பாகி வரும் நிலையில் வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார் எனவே ரஜினி லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து லியோ படத்தினை இயக்கி வரும் நிலையில் பான் இந்திய படமாக உருவாகும் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்தியு தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், திரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில் இதனை அடுத்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக லியோ படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இவ்வாறு லியோ பணத்தினை முடித்துவிட்டு லோகேஷ் கனராஜ் அடுத்ததாக யாருடன் இணைய இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ரஜினியின் 171வது படத்தினை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கப் போகும் கதைகளும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி போலி என்கவுண்டர்களை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம் மேலும் உண்மையில் நடந்த போலி என்கவுண்டர் சம்பவங்களை வைத்து லோகேஷ் கனகராஜ் தயார் செய்கிறார் எனவும் பேசப்படுகிறது. அப்படி ரஜினி இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்து முடித்த பிறகு ஜெயம் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.