actor rajikiran salary viral in social media: தமிழ் சினிமாவில் முதன் முதலாக “என்ன பெத்த ராசா” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் ராஜ்கிரண் இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரன் திரைப்படத்தில் நடிகராக வலம் வந்தது மட்டும் அல்ல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களை உருவாக்கியுள்ளார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக திரையுலகில் போட்டி போட்ட ஒரு நடிகர் என்றால் அது ராஜ்கிரண் தான்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி கமல் விஜயகாந்த் ராமராஜன் போன்ற பல்வேறு பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களை கொண்டாடி வந்த ரசிகர் மத்தியில் ராஜ்கிரண் திரைப்படத்திற்காகவே ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் திரண்டு விட்டனர். அந்த வகையில் இவருடைய மாசான ஸ்டைல் என்னவென்றால் தொடை தெரிய வேஷ்டியை தூக்கி கட்டி கொண்டு கம்பீரமாக இருப்பதுதான்.
மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார். அந்த வகையில் இவர் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம் இதனை நமது நடிகரே சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நான் சினிமாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் என அவரே பலமுறை கூரியுள்ளார் ஆனால் அதன் பிறகு 25 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து தன்னை ஒரு பிரபலமான நடிகராக காட்டிக் கொண்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் குணச்சித்திர வேடங்களிலும் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலுவை கூட நடிகர் ராஜ்கிரன் தான் முதன்முதலாக திரை உலகில் அறிமுகம் செய்தார்.