நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே ஒரு நண்பர் – இந்த ஹீரோ மட்டும் தானாம்.! யார் அது தெரியுமா.?

ragava-lawrence
ragava-lawrence

சினிமாவுலகில் டான்சராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் லாகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் இவரது படங்கள் ஒன்று இரண்டு  வெற்றியை பெற்று இருந்தாலும் போகப்போக தோல்வியை தழுவியதால் இவரை வைத்து படம் எடுக்க எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை.

ஒரு கட்டத்தில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் படங்களை சொந்தமாக அவரே இயக்கி நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில்தான் காஞ்சனா சீரிஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ராகவாலாரன்ஸின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே போனது தற்போது அதிகாரம், ருத்ரன் சந்திரமுகி 2 ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த படங்கள் ஹிட்டடிக்கும் பட்சத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கொள்வார் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி உள்ளார் அவர் சொன்னது : சினிமா உலகில் எனக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது.

எனக்கு இருக்கும் ஒரே நண்பன் தளபதி விஜய் தான் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் இரண்டு பேரும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றோம்  சினிமாவையும் தாண்டி ராகவா லாரன்ஸ் நடத்திவரும் கட்டளைக்கு ஏதாவது உதவி என்றால் தளபதி விஜய்க்கு போன் செய்வது வழக்கம் அவரும் சில சமயங்களில் கேட்காமலேயே பணம் கொடுத்திருக்கிறாராம்.

இப்படி  இவர்கள் இருவரும் இருந்தாலும் சினிமாவுலகில் மட்டும் தனித்தனியாக பயணிக்கின்றனர். ராகவா லாரன்ஸ் புதிய படங்களை இயக்கினாலும் அதில் விஜய் நடிக்க வர மாட்டாராம் அதுபோல விஜய் நடிக்கும் படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்தது இல்லை.