நீ தல ரசிகன் அதனால வேண்டாம்.? தளபதி 68-ல் இருந்து பிரபல நடிகரை தூக்கி எறிந்த விஜய்.! உண்மையை உடைத்த வெங்கட் பிரபு..

thalapathy 68 movie

Thalapathy 68 : இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தளபதி விஜய் பிரேம்ஜி தல ரசிகர் என்பதால் என் படத்தில் நடிக்க கூடாது என சொன்னதாக வெங்கட் பிரபு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் பொடக்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அவர் பேசியதாவது லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்துள்ளேன் மிரட்டலாக வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் இடைவெளி காட்சியின் பொழுது சில மிரட்டலான   காட்சிகள் இருந்தது அதேபோல் லியோ திரைப்படத்திலும் மிரட்டலான காட்சிகள் இருக்கிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வெங்கட் பிரபு திரைப்படத்தில் தான் தளபதி 68 இல் நடிக்க இருக்கிறார் தளபதி விஜய்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் குறித்து அப்டேட்கள் அடிக்கடி இணையதளத்தில் கசித்துக் கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதால் ஒரு விஜய்க்கு பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

அதேபோல் மற்றொரு விஜய்க்கு நாயகியாக ஜோதிகா, சிம்ரன், சினேகா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது வெங்கட் பிரபு சமீபத்தில் சினேகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்துள்ளார் அதனால் தளபதி 68 ல் சினேகா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே வெங்கட் பிரபு அஜித்திற்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு என ஹிட் கொடுத்த நிலையில்  விஜய்க்கு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு பிரேம்ஜி இருவரும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள் அதில் தளபதி விஜய் பிரேம்ஜி அவர்கள் தல ரசிகர் என்பதால் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அதாவது பேட்டியில் பிரேம்ஜி கூறும் பொழுது தளபதி என்கிட்ட நானும் உங்க அண்ணனும் படம் பண்ணும் பொழுது அதில் நீ நடிக்க கூடாது என சொன்னாரு ஏன் அண்ணான்னு கேட்டதுக்கு நீ தல ஆளு என்று சொன்னார் நீ வேணும்னா அந்த படத்துக்கு மியூசிக் பண்ணு ஆனா அதில் நீ நடிக்க கூடாது என சொன்னாரு.

அதன் பிறகு பிரேம்ஜி கெஞ்சி கூத்தாடி அண்ணா ஏற்கனவே உங்க ரசிகர்கள் என்ன  கழுவி கழுவி ஊத்துறாங்க என நகைச்சுவையாக பிரேம்ஜி அவர்கள் கூறியிருந்தார்.

premji
premji