தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் தயாரித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாக நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இத்திரைப்படம் அவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை ஆனால் அதன் பிறகு வெளியான மாநாடு என்ற திரைப்படம் சுமார் மூன்று நாட்களில் மட்டுமே 22 கோடி வசூல் செய்த மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய திரைப்படம் வெற்றியானது காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவிற்கு தங்கச் செயின் பரிசாக அளித்திருந்தார். தொடர்ந்து பிரேம்ஜியும் மாநாடு திரைப்படம் வெற்றியானது இருக்கு என் அண்ணனுக்கு தங்க செயின் எங்கே என சிம்புவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த பிரேம்ஜி சிம்புவை டேக் செய்து மைடியர் தலைவா என் அண்ணன் வெங்கட்பிரபு அட்ரஸ் உங்களுக்கு அனுப்பவா என கிண்டல் செய்யும் அளவிற்கு இந்த பதிவினை வெளியிட்டு இருந்தார் இதற்கு பல்வேறு தரப்பு ரசிகர்களும் சமன் செய்து வருவதை பார்த்திருந்தோம்.
அந்த வகையில் தற்போது இந்த பதிவுக்கு நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் சிரிப்பது போன்ற ஒரு ஸ்மைலி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு எஸ்ஜே சூர்யா போட்ட பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.