மாநாடு வெற்றியை தொடர்ந்து பெரும்புலி உடன் கைகோர்க்கும் நடிகர் பிரேம்ஜி..! எல்லாம் சிம்பு கைராசி தான் போல..!

premji-02

சிம்பு நடிப்பில் வெகுநாட்கள் கழித்து வெளிவந்த திரைப்படம் தான் மாநாடு இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் கெத்து காட்டி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மூலம் சிம்புவின் மார்க்கெட் எகிறி விட்டது என்றே கூறலாம்.

இவ்வாறு உருவான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் தான் யுவன் சங்கர் ராஜா மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பெருமளவு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அந்த வகையில் சிறிதளவு முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் அந்த காமெடி கதாபாத்திரத்தில் தற்போது நடித்த தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி உள்ளவர்தான் பிரேம்ஜி.

இவ்வாறு பிரபலமான நமது நகைச்சுவை நடிகர் வெங்கட்பிரபுவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். வெகுநாட்கள் கழித்து பிரேம்ஜியும் இப்படி ஒரு ஹிட்டான திரைப்படத்தில் நடித்தது ரசிகர்களை சந்தோஷ படுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்தை வாய்ப்பையும் பிரேம்ஜி பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது.

premji-02
premji-02

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் அவர்கள்தான் இயக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளது.மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.