தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர் அஜித் விஜய். இவர்கள் எப்பொழுதும் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர் அதேசமயம் அந்தப் படங்களும் சூப்பர் ஹிட் அடிப்பதால் மென்மேலும் சினிமா உலகில் உயர்ந்து கொண்டே இருக்கின்றனர் ஆனால் ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய்யை ஓரம்கட்டி டாப் நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த்.
ஆனால் காலப்போக்கில் இவரது படங்கள் பெரும் தோல்வியை தழுவ அஜித், விஜய் ஆகியோர் பிரசாந்தை ஓவர்டேக் செய்த தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். பிரசாந்த் தோல்வியிலிருந்து வெற்றியை கொடுக்க நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் இரண்டு முக்கிய திரைப்படத்தை நடிகர் பிரசாந்த் தவறவிட்ட உள்ளார்.
திரைப்படங்களில் படுத்திருந்தாள் பிரசாந்த் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்திருப்பார் என பலரும் கூறுகின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தீனா திரைப்படத்தில் அஜித் நடித்து ஆக்சன் ஹீரோவாக நடித்து மிரட்டியிருப்பார் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தானாம்.
இந்த படத்தின் கதையை அர் முருகதாஸ் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியுள்ளார் அவருக்கு இந்த கதையை பிடித்திருந்தாலும் அப்பொழுது பிரசாந்த் பல்வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் இந்த படத்தை நழுவ விட பின் அஜீத் நடித்ததாக கூறப்படுகிறது. அதேபோல ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரசாந்த் நடிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் 1998 ஆம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருப்பார் அதேபோல கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எனது மகன் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என பிரசாந்தின் தந்தை கூறி உள்ளார் ஆனால் ராஜீவ் மேனன் இதை மறுக்கவே இந்த படத்தில் அஜீத் அடுத்ததாக கூறப்படுகிறது.
அஜித் இந்த இரண்டு திரைப்படங்களில் நடித்தது பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்போது உச்ச நட்சத்திரமாக மாறினார். இந்த படங்களில் அன்று பிரசாந்த் நடித்து இருந்தார் என்று அவர் உச்ச நட்சத்திரமாக இருந்திருப்பார் ஆனால் விதி சரியாக விளையாண்டு விட்டது.