தமிழ் சினிமாவில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரோஜா மற்றும் பாட்டியாக பானுமதி போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி க்கு இணையாக பிரசாந்த் போட்டி போட்டு நடித்து இருப்பார் அந்தவகையில் பானுமதியை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு பிரசாந்த் மிக சிறப்பாக நடித்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதேபோல இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்தது மட்டுமில்லாமல். அந்தவகையில் இவர் அணிந்திருந்த டி-ஷர்ட் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது.
மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த செம்பருத்தி திரைப்படம் ஆனது பிரசாந்தின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது மட்டுமில்லாமல் அவர் நடித்த காலகட்டத்தில் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கு இணையாக நடனமாடும் ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த் தான்.
அந்த வகையில் நடிகர் பிரசாந்த் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர், போன்ற பல்வேறு பழம்பெரும் இயக்குனர்களின் திரைப்படத்தில் அவர் நடித்தது மட்டுமில்லாமல் பின்னர் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் அவருடைய மவுசை முற்றிலுமாகக் குறைந்து விட்டது.
பின்னர் தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக சினிமாவில் முகம் காட்ட முடியாமல் போன பிரசாந்த் தற்போதுவரை தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார் என்றே கூறலாம்.