பிரபல இயக்குனரின் படத்தை ஆரம்பித்திலேயே நிராகரித்த நடிகர் பிரசாந்த்.? பின் என்ன நடந்தது தெரியுமா..

prashanth
prashanth

அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தியாகராஜன் இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார் இந்த படம்  1981 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து நடிகர் தியாகராஜன் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல படைப்புகளை கைப்பற்றி நடித்தார் அந்த வகையில் மலையூர் மம்முட்டியான், ஆணழகன், பொன்னர்-சங்கர், நீங்கள் கேட்டவை, என்னை பார் என் அழகை பார், நல்ல நாள் என பல படங்களில் நடித்தும், இயக்கியும் ஓடினார்.

இப்படி இருந்தாலும் இவரது மகன், மனைவியை வீடியோ உலகில் பெரிதும் காட்டியதே கிடையாது. இந்த சமயத்தில் தான் நடிகர் சத்யராஜ் தியாகராஜன் வீட்டிற்கு சென்று உள்ளார் அவர் போனதற்கு காரணம் தங்கையின் திருமண அழைப்பிதழை கொடுபதற்கு சென்றுள்ளார் அப்போது நடிகர் தியாகராஜன் வீட்டில் இல்லாததால் தியாகராஜனின் மகன் பிரசாந்தை நடிகர் சத்யராஜ் சந்தித்துள்ளார்.

தியாகராஜனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார் பின் தனது படங்களின் இயக்குனர், தயாரிப்பாளரிடம் சொல்லி உள்ளார். இதை அறிந்து கொண்ட கே. பாலச்சந்தர் உடனடியாக தியாகராஜனை சந்தித்து உனது மகன் பிரசாந்தை நான் இயக்கும் வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தை நடிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு தியாகராஜன் பிரசாந்த் மருத்துவம் படிக்கப் போவதாகவும் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றும் கூறி உள்ளார் ஆனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் பிரசாந்த் படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்டுள்ளனர் ஒரு கட்டத்தில் அவர் வைதேகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இதை அறிந்துகொண்ட கே பாலச்சந்தர் என் மீது நம்பிக்கை இல்லையா..

நான் கேட்ட பொழுது நடிக்க மாட்டார் என சொன்னிர்கள் ஆனால் இப்பொழுது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார் அதன் பிறகு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்திலும் நடிகர் பிரசாந்த் நடித்து இருந்தார் அதனைத் தொடர்ந்து பல சிறப்பான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.