70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரபு இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரபு. இவர் தன்னுடன் நடித்த சகா நடிகைகளை காதலித்து கைவிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் இவர் கமலுக்கு வாத்தியாராக இருப்பார் என்பது போல பல நடிகைகளை காதலித்து கைவிட்டு இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனும் சினிமாவில் ஆரம்பத்தில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கே டப் கொடுக்கும் வகையில் நடிகர் பிரபு அவர்கள் சில நடிகைகளுடன் வெளிப்படையான காதலில் இருந்து வந்திருக்கிறார் இதைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நடிகை குஷ்பூ:- நடிகை குஷ்பு அவர்கள் வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடைய நீண்ட நாள் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது அது மட்டுமல்லாமல் இவர்களுடைய காதல் திருமணம் வரைக்கும் சென்றது ஆனால் அதன் பிறகு எதுவுமே நடக்கவில்லை.
அதன் பின்னர் தனுடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவியின் அழகில் மயங்கி காதல் வளையில் சிக்கினார். ஆனால் அந்த நேரத்தில் பிரபு அவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இந்த காதலையும் கழட்டி விட்டார்.
ஸ்ரீதேவியை தொடர்ந்து அடுத்ததாக 200 படங்களுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அம்பிகா அவர்களும் பிரபுவுடன் தொடர்ந்து ஏழு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடித்த காரணத்தினால் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது ஆனால் கல்யாணம் வரை செல்லாமல் பாதிலேயே இவர்களுடைய காதல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நடிகை தேவிகாவின் மகளான கனகாவை காதலிக்க ஆரம்பித்தார் அதாவது கனகா அவர்கள் தொடர்ந்து பிரபு உடன் நான்கு திரைப்படங்களில் நடித்து வந்தார் அப்போது கனகாவின் கண்ணழகில் ஈர்க்கப்பட்ட பிரபு கனகாவே கதி என்று கிடந்தார் அதன் பிறகு கனகாவையும் கழட்டிவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரபு.