தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தமிழில் நடித்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இத்திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்தவகையில் இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்பொழுது ராதா ஷ்யாம், சாலார், ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகிவரும் ஆதிபுஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் பல கோடி பட்ஜெட்டில் அமைந்து வருகிறது. தற்பொழுது இவரின் மார்க்கெட்டும் எங்கேயோ போயி உள்ளது இதற்கெல்லாம் முக்கிய காரணம் பாகுபலி தான். இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் அதிகப்படியான சம்பளத்தை பெற்று வருகிறார.
இவ்வாறு திரைப்படங்களின் வாய்ப்பு ஒரு பக்கம் குவிய மற்றொரு பக்கம் பல தயாரிப்பு நிறுவனங்களும் பிரபாசை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு ஆண்டில் மின்னணு பொருட்கள்,காலனிகள், சோப்புகள் ஏராளமான விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.
இவ்வாறு கிடைத்த விளம்பரங்களில் பிரபாஸ் நடித்திருந்தால் ரூபாய் 150 கோடி சம்பளம் பெற்று இருக்கலாம். ஆனால் இந்த விளம்பரங்களில் பிரபாஸ் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தனக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்து வருவதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.