Lokesh kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்க்க உள்ளார்.
அப்படி தலைவர் 171, கைது 2 போன்ற படங்களை இயக்க இருக்கும் நிலையில் விரைவில் பிரபாஸை வைத்தும் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை என்றும் அதில் பிரபாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நான்கே திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அப்படி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க டாப் நடிகர்கள் வரிசை காட்டி நிற்கின்றனர். தனது கடைசி படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம் ரஜினி. விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தின் இயக்கி முடித்துள்ளார்.
இதனை அடுத்து ரஜினி உடன் இணைவதும் கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. அப்படி லியோ படத்தில் ரிலீசுக்கு பிறகு தலைவர் 171-வது படத்தின் அப்டேட் வழியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் பிரபாஸ் லோகேஷ் உடன் இணைய விரும்புகிறாராம்.
பாகுபலி படத்திற்கு பிறகு பெரிதாக ஹிட் படம் கொடுக்காமல் திணறி வரும் பிரபாஸ் லோகேஷ் உடன் இணைய முடிவெடுத்துள்ளார். எனவே சூர்யாவுக்காக இரும்பு கை மாயாவி என்ற கதை எழுதினார் கைதி படம் வெளியான பொழுதே இவர்களுடைய கூட்டணியில் இந்த படம் உருவாக இருந்தது. ஆனால் இரும்புக் கை மாயாவி ப்ராஜெக்ட் தள்ளி போனதால் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெமியோ ரோலில் சூர்யா நடித்தார்.
இவ்வாறு தற்பொழுது இரும்பு மாயாவி படம் உருவாக இருப்பதாகவும் ஆனால் சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதையில் பிரபாஸ் நடிக்க இருக்கிறாராம் மேலும் பிரபாஸுக்காக மற்றொரு கதையும் லோகேஷ் கனகராஜ் தயார் செய்துள்ளார் என கூறப்படுகிறது