நடிகர் பிரபாஸ் பாகுபலி 1,2 படத்துக்கு வாங்கிய சம்பளம் இவ்வளவு கம்மியா.. ஷாக்கான ரசிகர்கள்.

prabhas
prabhas

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை காதல், ஆக்ஷன், ரொமான்டிக், சென்டிமென்ட் என அனைத்து படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் அதன்படி நடிகர் பிரபாஸ் தெலுங்கில் தொடர்ந்து ஆக்ஷன், காதல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு ஓடினார் இருப்பினும் அவரால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி பிரபாஸுக்கு கதை சொல்லி கமிட் ஆன திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படம் ஒரு வரலாற்றுத் திரைப்படம் போன்று எடுக்கப்பட்டிருந்தால் இந்த படம் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டது இந்த படம் திரையரங்கில் வெளியாகி எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

இந்த படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, நாசர், அனுஷ்கா, தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் அதன் அடுத்த பாகத்திலும் நடித்தனர் இரண்டாவது பாகமான பாகுபலி 2 முதல் பாகத்தை விட அதிக அளவுக்கு வசூல் வேட்டையை செய்து அசத்தியது இதனால் இந்த படத்தில் நடித்தவர்கள் என் நிலைமையும் அப்படியே மாறிப் போனது.

அதிலும் குறிப்பாக ஹீரோவாக நடித்த பிரபாஸின் கேரியர் இமயத்தை தொட்டது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் பிரமாண்ட பட்ஜெட் படங்களாகவே இருந்துவந்துள்ளது. இப்ப கூட நடிகர் பிரபாஸ் 4, 5 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் இந்த நிலையில் அவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

ஆனால் பிரபாஸ் பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து சூப்பர் தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது அதன்படி பார்க்கையில் பாகுபலி 1 – க்காக நடிகர் பிரபாஸ் 20 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். பாகுபலி 2 இருக்கிற நடிகர் பிரபாஸ் 25 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.