பணத்திற்காக என் உறவினர்கள் என்னை இப்படி செய்தார்கள்.! மனம் திறந்த பவர் ஸ்டார்..

POWER-STAR
POWER-STAR

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி பவர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சீனிவாசன். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அதனை இயக்கி, தயாரித்தும் இருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு தான் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு பிரபலத்தை தந்தது காமெடி நடிகராக ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். கடைசியாக இவர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த கேப்மாரி என்ற படத்தில் பவர் பாண்டித்துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற நிலையில் தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்தும், படத்தினை இயக்கியுள்ளார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடித்து இருக்கிறார் எனவே இந்த படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் படப்பிடிப்பின் பொழுது பவர்ஸ்டார் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். இவ்வாறு பல பிரச்சனைகளை சந்தித்த பவர் ஸ்டார் சமீப பேட்டி ஒன்றில் ஏராளமான தகவல்களை பகிர்ந்த நிலையில் அந்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் பெட்டியில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது, நான் மதுரையில் அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்து வந்தேன் சென்னை வந்தவுடன் ஒரு படத்திற்கு பண உதவி செய்திருக்கிறேன்.

பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று எடுத்த படம் தான் லத்திகா. பணம் இருந்த பொழுது என்னுடன் பல பேர் இருந்தனர் அப்படி இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் பணம் சென்ற பின்னர் அப்பொழுது இருந்த யாருமே என் பின்னால் வரவில்லை மேலும் ஒருமுறை ஒரு கடத்தல் கும்பல் தன்னை கடத்தி படம் பற்றி பேசுவோம் என்று கூறினார்களாம் அதற்குப் பிறகு விசாரித்த போது தான் தெரியாதது தன்னை கடத்தியது வேறு யாரும் இல்லை தன்னுடைய உறவினர்கள் தான் என்று எனவே தன்னுடைய வாழ்வில் சில குளறுபடிகளால் மிகவும் மன வேதனைகள் இருந்ததாக பவர் ஸ்டார் கூறியுள்ளார்.