கடும் குளிரிலும் சட்டையை போடாமல் உட்கார்ந்து இருந்த நடிகர்.. பொன்னம்பலம் சொன்ன உண்மை சம்பவம்

Ponnambalam
Ponnambalam

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அப்படி நடித்த திரைப்படங்களில் ஒன்று முத்து இந்த படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முத்து படம் குறித்து நடிகர் பொன்னம்பலம் பேசியுள்ளார். கடல்ல முத்து எப்படி அதிசயமோ அதே மாதிரி தான் கேஎஸ் ரவிக்குமார் சார் இயக்குன முத்து படமும் சினிமாவுல அதிசயம் தான்.. முத்து இத்தனை வருஷம் கழிச்சிம் திரும்பவும் ரிலீஸ் ஆகிறது.

உண்மையை சொன்ன மீனா.. விஜயாவை பார்த்து சிரித்த குடும்பத்தினர் – சிறக்கடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மக்கள் இன்னும் அந்த படத்தை கொண்டாடி ரசிக்கின்றனர் ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து செதுக்கிய அதனால் தான் இன்னைக்கும் பொன்னம்பலத்திற்கு அந்த படம் நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது மீனா, வடிவேலு இப்படி எல்லோருடைய கேரக்டருமே  பேசப்பட்டது.

ரஜினி சார் படங்கள்ல எல்லா வயதினரும் ரசிக்கும்படி காமெடி சீரியஸ் கலந்த படம் இது.  எல்லா புகழும் கே எஸ் ரவிக்குமார் சாருக்கு தான் போய் சேரும்.. அவருக்கு இந்த நேரத்துல என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. ரஜினி சாரை அடிக்கிற சீன் படத்தோட திருப்புமுனை அவர் அடிவாங்கியது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடியில் நன்கடை கொடுத்த சன் டிவி.! எத்தனை கோடி தெரியுமா.?

போகும்போது படத்துல இருக்குற கதாபாத்திரங்கள் மட்டுமல்ல பார்வையாளர்கள் அத்தனை பேரும் அழுவாங்க அப்படி ஒரு பயங்கரமான செண்டிமெண்ட் சீன். நான் அவரை அடிக்கிற காட்சியில அவர் கொஞ்சம் முன்னாடி வந்ததால் தெரியாம உண்மையாலேயே அடி விழுந்திடுச்சு கீழே விழ பார்த்த வரை எல்லோரும் ஓடிவந்து புடிச்சுக்கிட்டாங்க..

ஆனா ரஜினி சார் என்ன சொன்னா தெரியுமா சாரி சாரி மை மிஸ்டேக் அப்படின்னு சொல்லிட்டாரு உண்மையை சொல்லனும்னா அவர் அப்படி சொன்னதும் அவர் எப்படி அந்த காட்சியிலே காட்சியில அழுதுகிட்டு போவாரு அப்படித்தான் நான் அழுதுட்டேன். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் எல்லோரையும் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப சமமா நடத்துவார் கிளைமாக்ஸ் ஃபைட் மைசூர்ல நடந்தது.

காலையில சண்டைக் காட்சி நாங்க எல்லாம் கிளம்பரத்துக்காக வெளியே வந்தோம் ஷூட்டிங் ஸ்பாட்ல பனி ஊத்திக்கிட்டு இருந்தது. யாரோ ஒருத்தர் 4 : 30 மணிக்கு சட்டை போடாமல் உட்கார்ந்து இருக்கிறார் கனடா காரர்  உட்கார்ந்து இருக்கிறார் நாம  பேசுனா கூட அவக்கு தெரியாது..

அப்படின்னு நினைச்சுகிட்டு யார்ரா அவன் சட்டையை போடாம இந்த நேரத்துல காட்டான் மாதிரி உட்கார்ந்து இருக்கான்னு சொல்லிட்டு கிட்டக்க போய் பார்த்தா ரஜினி சார் தூக்கி வாரி போட்டுடுச்சு அவர் ஏன் இமையமலைக்கு போறாரு எப்படி அந்த குளிரை தாங்குறார்னு அப்போதான் தெரிஞ்சுது.

கூட ஒர்க் பண்றவங்களோட கஷ்ட நஷ்டத்தை உணர்ந்தவரு பொதுவா எந்த படத்துக்கும் அட்வான்ஸ் முன்னாடியே வாங்க மாட்டேன் உழைப்பாளி படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது ரஜினி சார் கூட பாக்ஸிங் பண்ற மாதிரி சீன் ஆனா அந்த நேரம் பார்த்து எனக்கு கால் அடிபட்டிருந்தது.

அந்த படத்தோட மேனேஜர் ராமநாதன் சார் அந்த சூழ்நிலையும் என்னை நடிக்க கூப்பிட்டாரு என் காலு அடிபட்டு இருக்கு நான் இன்னும் உங்க படத்துக்கு அட்வான்ஸ் கூட வாங்கல. என் நேர்மையை புரிஞ்சுக்கோங்க கால் அடிபட்டு இருக்கிற சூழலில் கூப்பிடுவது சரியில்லை என சொல்லிவிட்டேன்.

ரஜினி சார் கிட்ட போய் நான் சொல்லாத  ஒன்னுக்கு ரெண்டா போய் சொல்லி விட்டுட்டாரு எனக்கு பதிலா வேறு ஒருத்தரை வச்சு பண்ணிக்கோங்க ரஜினி சார் கிட்ட தப்பா சொல்லிட்டதால இந்த படத்தில் இருந்து விலகிட்டேன். ஒருநாள் ரஜினி சாரை டப்பிங்குல இருக்கும் போது அவரை போய் பார்த்து  என்னோட கால சூழலை சொன்னேன்..

நான் தாங்கி தாங்கி நடக்கிற பார்த்து அவரும் புரிஞ்சிகிட்டாரு அதோட விளைவு தான் எனக்கு முத்து பட வாய்ப்பு வந்தது. அந்த படத்துக்கு முன்னாடி எனக்கு இரண்டரை லட்சம் சம்பளம் ஆனால் முத்து படத்துல ரஜினி சார் சொன்னதுக்கு பிறகு அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க என கூறினார்.