சார்பாட்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த திரைபடத்தில் கால் எடுத்து வைக்கும் ரெங்கன் வாத்தியார்..!

pasupathi-12

actor pasupathi latest movie update: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் பசுபதி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் இவர் வில்லனாகவும் நடித்துள்ளார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கூத்து பட்டரை என்ற மேடை நாடகக் குழுவில் இருந்து தான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படமானது ரசிகர்களை பெரும் அளவிற்கு கவர்வது மட்டுமல்லாமல் இவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்துவிட்டது.  அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் கதாநாயகன் உட்பட அனைவருக்கும் சிறந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு 52 வயது ஆன நிலையிலும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தின் பூஜை கூட முடிவடைந்துள்ளது.அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவருடன் பல்வேறு பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

அந்த வகையில் ரோஷினி, அம்மு அபிராமி, மயில்சாமி ஆகியவர்கள் நடிக்கவுள்ளர்கள் மேலும் இத்திரைப்படத்தை கார்த்திக் நடிக்கும் சர்த்தார் திரைப்படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது மட்டுமன்றி இத்திரைப்படத்தை ராம் சங்கைய்யா அவர்கள் தான் இயக்கவுள்ளார்.

pasupathi-11
pasupathi-11