நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில்.. அஜித்தை இழுத்து பேசிய நடிகர் பார்த்திபன்.! அதுக்கின்னு இப்படியா..

ajith
ajith

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தாலும் நடிப்பில் இவருக்கு அதிகம் ஆர்வம் இருந்ததால் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் நடித்த குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்னும் பிடித்த திரைப்படங்களாக இருந்து வந்துள்ளன இதைத் தவிர அவர் பல்வேறு படங்களை இயக்கி நடித்தும் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கூட இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படமும் மிகச் சிறப்பாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சில விஷயங்களை பார்த்திபன் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளது. முதலில் நடிக்க ஆசைப்பட்டு வந்த என்னை தமிழ் சினிமா இயக்குனராக பார்க்க ஆசைப்பட்டது அதனால் தான் உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின் நடிக்க ஆரம்பித்தேன். சினிமா பக்கம் போனால் ஏற ஏற இறக்கப் பார்க்கிறார்கள்.

இதுவே நடிகர் அஜித் ஒரு பைக்கை நிறுத்தி வாய்ப்பு கேட்டால் வாண்டடாக போய் வாய்ப்பு கொடுக்கிறார்கள் நான் போய் வாய்ப்பு கேட்டால் மதிக்க மாட்டிக்கிறார்கள். என்னிடம் நடிக்க வேண்டும் என ஆசை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.