திரை உலகில் சிறந்த இயக்குனராக வலம் வருவது மட்டுமில்லாமல் நடிப்பு பாடல் என பன்முக திறன் கொண்டவர் தான் நடிகர் பார்த்திபன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் சினிமாவில் நடிக்கும்போது கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி குணச்சித்திர வேடங்கள் வில்லன் கதாபாத்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலமாக வெளிவந்த ஒத்த செருப்பு என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பார்த்திபன் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அரசன் வேடத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் ஆனது பார்த்திபன் இது தவிர வேறு எந்த ஒரு நடிகருக்கும் பொருந்தாது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும் இத்திரைப்படத்துக்கு இயக்குனர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ள திரைப் படமாக அமைந்துள்ளது.
ஆனால் இதற்கு முன்பாகவே ஏ ஆர் ரகுமான் இசையில் பார்த்திபன் நடித்த திரைப்படம் இணைவதாக இருந்தது ஆனால் இத்திரைப்படம் சில காரணங்களை மூலமாக பாதியிலேயே கைவிட பட்டு விட்டது. இந்நிலையில் மீண்டும் ஏ ஆர் ரகுமான் உடன் கூட்டணி வைப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனை ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.