நடிகர் பாண்டிராஜ் தன்னுடைய இரண்டு மகன் மற்றும் மருமகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
நடிகர் பாண்டியராஜன் அவர்களை புதுமை கலை மன்னன் என்று அன்போடு மக்கள் அனைவரும் அழைப்பார்கள் இவர் சென்னையை சேர்ந்தவன் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர். சென்னையில் சைதாப்பேட்டையில் உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் முடித்தார் அதன்பிறகு கலைத் துறையில் அதிக ஈடுபாடு இருந்ததால் சினிமாவில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் சினிமாவிற்கு அழகு, தோற்றம், உயரம் எதுவும் முக்கியமில்லை எனவும் நிரூபித்த ஒரே கலைஞர் இவர்தான் பாண்டியராஜ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் திருட்டு முழிதான் இவர் முதன்முதலில் பாக்கியராஜ் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும் பாண்டியராஜ் 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலமடைந்தார் இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என சினிமாவில் பல வகையில் பணியாற்றியுள்ளார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கன்னிராசி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இவர் இயக்கிய திரைப்படங்களில் இவரே நடித்தும் உள்ளார். இவர் இயக்குனர் நடிகர் மட்டுமல்லாமல் பல கலைஞர்களை சினிமாவில் வளர்த்துவிட்ட வரும் இவர்தான் அந்த வகையில் ஸ்ரீகாந்த்தேவா ஒளிப்பதிவாளர் நித்தியா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா என பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
சினிமாவில் பல சாதனைகளை செய்த பாண்டிராஜ் காலப்போக்கில் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் அதன் பிறகு மீண்டும் ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் பாண்டிராஜ் நடித்திருந்தார். சமீபகாலமாக நடிகர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியராஜன் 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் அப்பொழுது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள்தான் வாசகி. தற்பொழுது இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் பல்லவன் ராஜன் பிரிதிவிராஜன் பிரேம் ராஜன். இதில் இரண்டாவது மகன் பிருத்விராஜன் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பிரிதிவிராஜன் வாய்மை, முப்பரிமாணம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ஸ்ட்ரீட் லைட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மருமகள் பேரக்குழந்தைகள் என அனைவரிடமும் நின்று புகைப்படம் எடுத்துள்ளார் பாண்டியராஜன் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.