தமிழ் சினிமாவின் வசூல் சக்கரத்து வருத்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருவதால் இவரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என அழைத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வரும் நிலையில் மேலும் விக்ரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட ஆறு வில்லன்களும் ,முன்னணி நடிகைகளான திரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் என மூன்று நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய பேச்சினை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
மேலும் இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் பகத் பாசில்.இவர்தான் தற்பொழுது தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர்களுடன் பகத் பாாசில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இதில் தளபதி 67 என்ற ஹேர் ஸ்டைக்கையும் இணைக்கப்பட்டுள்ளதால் பகத் பாாசில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இடம் செய்தியாளர் ஒருவர் பகத் பாாசில் உடன் மீண்டும் எப்பொழுது இணைவீர்கள் என்று கேட்டதற்கு விரைவில் இணைவோம் என பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.