கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்டு பல கோடி மக்களை அழித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனா நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு படுக்கை அறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோட ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒருபக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக அதாவது கொரோனாவின் இரண்டாவது அலை எப்பொழுது ஆரம்பித்ததோ அதிலிருந்து சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் இறந்து வருவதால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இன்றும் இரண்டு திரைப்பிரபலங்கள் உயிரிழந்துள்ளார்கள் எனவே கோலிவுட் வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அனைத்து நடிகர், நடிகைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுடைய ரசிகர்களுக்கும் போட்டு கொள்ளுமாறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று பிரபல இயக்குனரான அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.
இவரைத் தொடர்ந்து சினிமாவில் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து தனது எதார்த்த நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் நிதிஷ் வீரா இவரும் சில தினங்களாக கொரோனா தோற்று உறுதியானதை ம தொடர்ந்து தனிமைப் படுத்திக் கொண்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.