இருண்டுகிடந்த என்மகனின் வாழ்கையை பிரகாசமாக்கியது தளபதி விஜய் தான்..! கண்கலங்கவைத்த நாசரின் பேட்டி..!

vijay-3

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர்.  இவர் திரைப்படங்களில் வித்யாசமான நடிப்பை வெளிக் காட்டுவது மட்டுமல்லாமல் ஆக்ரோஷமான தன்னுடைய பேச்சால் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் அப்பா அண்ணன் போன்ற எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி நாசர் மிக சிறப்பாக நடிப்பதில் வல்லவர். இந்நிலையில்  நாசரின் மனைவி ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்ட பதிவில் நாங்கள்  அனைவருமே தளபதிக்கு கடமைப்பட்டு இருக்கிறோம் என்றுகூறியுள்ளார்.

ஏனெனில் நடிகர் நாசரின் மூத்த மகன் விபத்தின் காரணமாக தன்னுடைய சிந்தனையை இழந்து பழைய நினைவுகள் மொத்தத்தையும் மறந்து விட்டார். ஆனால் அவருடைய நினைவில் தளபதியும் தளபதி படங்கள் பாடல்கள் மட்டுமே நினைவில் இருந்ததாம்.

இதன் காரணமாக நாசரின் மூத்த மகன் பிறந்த நாளன்று நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடியது வியக்கத்தக்க செய்திதான். இவ்வாறு தளபதி விஜய் செய்வார் என்பது ஒரு அதிர்ச்சியான விஷயம்தான்.

பொதுவாக தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு உதவி செய்வது வழக்கம்தான் அந்தவகையில் நாசர் மகனை மட்டும் விட்டுவிடுவாரா என்ன..? இதுவரை யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு நாசரின் மகன் வாழ்க்கையில் தளபதி விஜய் ஒரு உறுதுணையாக அமைந்துள்ளார்.

இதன் காரணமாக தளபதி விஜய்க்கு குடும்பத்துடன் நன்றி சொல்ல  கடமை பட்டு இருக்கிறோம்.  என்று நாசரின் குடும்பத்தார் விஜயை பற்றி பெருமையாக  பேசி உள்ளார்கள். இவ்வாறு வெளியான செய்தி அனைத்து சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

vijay
vijay