நடிகர் நரேனுக்கு இவ்வளவு பெரிய மகளா.? அவரே வெளியிட்ட புகைப்படம்..

naren

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் நரேன் இவர் அடூர் கோபாலகிருஷ்ணனின் நிஜம் குத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து மலையாளம், தமிழ் என மாறி மாறி நடித்து வந்தார் அந்த வகையில் மலையாளத்தில் வெளியான 4 திபீப்பிள், அச்சுவிண்டே, அம்மா மற்றும் வகுப்பு தோழாரகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.மேலும் முதல் வணிகப்படமான 4 திபீப்பிள் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது. இவர் மலையாளத்தில் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் வெளிவந்த நெஞ்சு இருக்கும் வரை என்ற திரைப்படம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கிக் கொண்டார் ஏனென்றால் அந்த படத்தில் தன்னுடைய காதலிக்காக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தன்னுடைய இதயத்தை கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

naren 1
naren 1

அந்த காட்சிகள் தற்போது வரையிலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த படமாக திகழ்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அந்த வகையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

naren 2

இதற்கு முன்பாக கார்த்திக்குடன் இணைந்து கைதி படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இவருடைய 15வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார் இதனை தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளோம் என்று தனது மனைவியுடன் போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் அவரது முதல் மகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.