தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல், இவர் தேவயானியின் சகோதரர் ஆவார், காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் ‘அட்ரா அட்ரா நாக்க முக்க’ என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார், இந்தப் பாடலின் மூலம் இந்தப் படமும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நகுல் மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார், தற்பொழுது படவாய்ப்பு எதுவுமில்லாமல் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
நடிகர் நகுல் படங்களில் நடிப்பது இல்லாமல் படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார், அண்ணியன், திரைப்படத்தில் உள்ள காதல் யானை என்ற பாடலை இவர்தான் பாடினார், அதுமட்டுமில்லாமல் கஜினி, வேட்டையாடு விளையாடு வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் ஆகிய திரைப்படங்களிலும் பாடலை பாடியுள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி விட்டது அவரின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் நகுலுக்கு இவ்வளவு அழகான மனைவியா என கமென்ட் செய்து வருகிறார்கள்.