நடிகர் மயில்சாமி அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக நகைகளை அடமான வைத்துள்ளார் இது குறித்து தற்போது இவருடைய நெருங்கிய உறவினர்கள் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தற்பொழுது வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்தவர் தான் மயில்சாமி.
இவர் நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதநேயம் உடையவர் மேலும் சிவ பக்தனும் ஆவார் உடல்நல குறைவால் மயில்வான் சாமி சிவராத்திரி அன்று காலமானார். தற்பொழுது இவருக்கு 57 வயது ஆகும் நிலையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவே நேற்று அதிகாலை இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு இறந்தாலும் கூட இவருடைய நடிப்பும், இவர் செய்த தர்மங்களும் தற்பொழுது தலைசிறந்து நிற்கிறது. அந்த வகையில் தான் வசித்து வந்த சாலிகிராமம் பகுதியில் இருக்கும் ஏராளமான ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளார் மயில்சாமி. சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது கூட சாலிகிராமம் மக்களுக்கு உதவினாராம் தன் வீட்டின் அருகிலேயே சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பாராம்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக லாக் டவுன் போடப்பட்டது எனவே மக்கள் உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அப்பொழுது பலருக்கும் உணவு வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வீடு தேடி சென்று கொடுத்திருக்கிறார். இவ்வாறு இப்படி செய்ததால் ஒரு கட்டத்தில் கையில் இருந்து அனைத்து பணமும் செலவாகிவிட்டது எனவே வீடு தேடி வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் போய் உள்ளது இதன் காரணமாக நகைகளை அடகு வைத்து உதவி செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் நகைகளை அண்மையில் தான் மயில்சாமி மீட்டு இருக்கிறார். இவ்வாறு மயில்சாமி தண்ணீயாக பணத்தை செலவு செய்ததை பார்த்து பலரும் அறிவுரை கூறியுள்ளார்கள். கடன் வாங்கி உதவி செய்ய வேண்டுமா என கேட்க அதற்கு மயில்சாமி நான் இருக்கும் வரை என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்வேன், நான் வந்த போது எதையும் எடுத்துட்டு வரவில்லை போகும் பொழுதும் எதையும் கொண்டு செல்ல போவதில்லை அதனால் உதவி செய்ய கணக்குப் பார்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் இவ்வாறு மயில்சாமி பற்றி பலரும் பெருமையாக பேசி வருகின்றனர்.