தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. பொதுவாக சினிமாவில் தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்வார்கள்.
அந்தவகையில் முரளியின் மூத்த மகனான அதர்வாவும் தற்போது உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முரளியின் இளைய மகன் ஆகாஷ் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சேவியர் பிரிட்டோ மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பல நடிகர்கள், நடிகைகளைப் பற்றி குற்றம்சாற்றி வரும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தற்போது முரளி மற்றும் அதர்வா பற்றி சில ரகசியங்களை கூறியுள்ளார்.
அதில் முதலில் முரளி போதைக்கு மிகவும் அடிக்டானார் அதேபோல அதர்வாவும் குடிப்பழக்கத்திற்கு முழுவதுமாக அடிக்டாகிவிட்டார். ஆனால் முரளி பெண்கள் மத்தியில் மரியாதையாக நடந்து கொள்வார். ஆனால் அதர்வா பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார். அதர்வாவிடம் இதைப் பற்றி கேட்டால் என்னை காதலிக்கும் எவரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி மறுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு நடிகர்களைப் பற்றி தப்பாக கூறிவரும் பயில்வான் ரங்கநாதனின் மீது திரை பிரபலங்கள் மிகவும் கோபமாக இருந்து வருகிறார்கள்.
நடிகர் அதர்வாவும் இந்த குற்றச்சாற்றை பற்றி என்ன கூறுவார் என்று காத்திருந்து பார்ப்போம்.