80,90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் சுமிதா இவர் 1980 ஆம் ஆண்டு saraswatheeyaamam என்னும் மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார் தமிழில் இவர் 1980 ஆம் ஆண்டு வண்டி சக்கரம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்தார் அதன் பிறகு இவருக்கு திரை உலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன.
மூன்றாம் பிறை, ரங்கா, சகலகலா வல்லவன், மூன்று முகம், என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் நடித்த ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி இவருக்கு மலையாளம், தெலுங்கு , கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார் சினிமா உலகில் ஒரு கட்டத்தில் நடிகர், நடிகைகளை புக் பண்ணுவதற்கு முன்பாக சில்க் ஸ்மிதாவை புக் பண்ண ஏராளமான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கியூவில் இருந்தனர் என சொல்லப்படுகிறது அந்த அளவிற்கு பேமஸ் ஆகி இருந்தாராம்.
தமிழில் ரஜினி கமல் என தொடங்கி டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வெற்றி கண்டவர். திரை உலகில் கிளாமர் கதாபாத்திரங்கள் நடிப்பவர்களுக்கு குறைந்த காலம் தான் வாய்ப்பு கிடைக்கும் அதுக்கு அப்புறம் தூக்கி எறிந்து விடுவார்கள் ஆனால் சில்க் ஸ்மிதா அப்படி கிடையாது அவர் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு ராணி போல தான் இருந்தார்.
இருந்தாலும் கிளாமர் காட்சிகளில் நடிப்பதை விட அவருக்கு முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அது அவருக்கு அமையாமல் போனது. இப்படி இருக்கின்ற நிலையில் சில்க் ஸ்மிதா பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது . அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்தார் முதலில் பிரபலங்கள் அனைவரும் சில்க் ஸ்மிதாவை குணச்சித்திர வேடத்தில் பார்க்க பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஆதரிப்பார்களா என்று பயந்து கொண்டே இருந்த சில்க் சுமிதாவுக்கு பாரதி ராஜா வந்து துணிந்து நடிக்க வைத்தார். நடிகை சில்க் சுமிதா கேரியரில் அந்த கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் உட்பட பல பிரமுகர்கள் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கினார். இதனை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார் ஆனால் சில்க் ஸ்மிதா இந்த படத்திற்கு பிறகு மீண்டும் அப்படி நடிக்கவில்லை ஏனென்றால் பெரும்பாலான இயக்குனர்கள் அவரை ஒரு கவர்ச்சி கன்னியாகவே காட்ட விரும்பினார்.