ஒரு மாத காலமாக சீல் வைக்கப்பட்ட மன்சூரலிகானின் வீடு..! கதவைத் திறந்தவுடன் காத்திருந்த துயர சம்பவம்..!

mansoor-3

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லனாக வளம் வருபவர்தான் நடிகர் மன்சூரலிகான் இவர் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பது மட்டுமின்றி சமீபகாலமாக காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி விஜயகாந்த் கமல் விஜய் என பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் சாதித்தது மட்டும் போதாது என்ற வகையில் அரசியலில் மிகத் தீவிரமாக இறங்கிய மன்சூர் அலிகான் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் ஒரு வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த வீடானது புறம்போக்கு நிலத்தில் 2500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாக அவருடைய வீட்டிற்கு அரசாங்கம் சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர் வழக்குப் போட்டு நடிகர் மன்சூரலிகான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

mansoor-2
mansoor-2

அப்பொழுது தன் வீட்டில் மாட்டிக்கொண்ட வளர்ப்பு பூனையை மீட்டெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் ஒரு மணிநேரம் வீட்டிற்குள் செல்ல மன்சூர் அலிகானுக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் ஒரு மாதமாக பூனைக்கு உணவு இல்லாததன் காரணமாக உயிரிழந்து விட்டது.
இதனால் கோபமடைந்த மன்சூரலிகான் உச்ச நீதிமன்றம் மூலம் உங்களை சந்திக்கிறேன் என மீடியாவில் ஆவேசமாக பேசியுள்ளார்.

mansoor-1