தமிழ் திரை உலகில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து தற்பொழுது கதாநாயகனாக வலம் வர தொடங்கி இருக்கும் நடிகர் தான் மணிகண்டன் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. மேலும் இவர் தற்பொழுது குட் நைட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் இந்த வாரம் குட் நைட் பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் வருகின்ற 12ஆம் தேதி மணிகண்டன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் நைட்.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள்,நடிகைகள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்துள்ளார்கள். அப்பொழுது நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை போல் பேசி அங்கு இருந்த போட்டியாளர்கள் மற்றும் பலரையும் அசர வைத்து விட்டார்.
ஆம் நடிகர் மணிகண்டன் முதலில் அஜித் விஸ்வாசம் மற்றும் பில்லா இதனைத் தொடர்ந்து வாலி போன்ற திரைப்படங்களில் அவரது குரல் எப்படி இருந்தது என்பதை பேசி காட்டினார். அதன் பிறகு நடிகர் கிஷோர் போல் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பார்த்தால் ரகுவரன் போல் பேசியதும் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள் நடிகர் ரகுவரன் அவர்கள் குரலை பலபேர் பேசி நாம் பார்த்துள்ளோம்.
ஆனால் அவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்த பொழுது எப்படி பேசி உள்ளாரோ அதேபோல் நடிகர் மணிகண்டன் பேசி அங்கிருந்த பலரையும் அசர வைத்து விட்டார்.மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித் வாலி படத்தில் எப்படி பேசி உள்ளாரோ அதேபோல் இவரும் பேசி உள்ளார் இவரிடம் பல திறமைகள் இருக்கிறது என்று கமெண்ட் செய்து இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
உங்களுக்குள்ள இப்படி ஒரு talent இருக்கா 👏🤩 #Manikandan
கலக்கப்போவது யாரு Champions Season 4 – வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KPYChampions4 #KPY #KPYChampions #VijayTelevision pic.twitter.com/AknZRlNsRO
— Vijay Television (@vijaytelevision) May 9, 2023